Categories
மாநில செய்திகள்

தமிழக பல்கலைக்கழகத்தில்…. புதிய மொழி பாடம் அறிமுகம்…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ், ஏராளமான பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு அந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயன்படும் வகையில், புதிதாக பல பாட திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில், தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை, மாணவர்களுக்கு ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுவதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து  ஜப்பான் தூதரக அதிகாரிகள், இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை, சந்தித்து பேசினர்.

இந்நிலையில் அவர்களுடனான சந்திப்புக்கு பிறகு,  உயர்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளதாவது, நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் ஏற்கனவே அறிவித்தது போல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்கில் sandwich course இந்த ஆண்டு முதல், சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி & தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி வேலூரில் 3.5 ஆண்டு சாண்ட்விச் கோர்ஸ் ஆகியவை தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உயர் கல்வித்துறை – மேன்டோ நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமானது கையெழுத்தாகியுள்ளது. எனவே மாணவர்களுக்கு நடத்தப்படுகின்ற 7 செமஸ்டர்களில், 2 செமஸ்டர்களுக்கு மேன்டோ பயிற்சியானது,  வழங்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை, பயிற்றுவிப்பது பற்றி,  ஜப்பான் தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனையும்  நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் மொழியை பயிலுவதற்கு, மாணவர்களும் ஆர்வம் செலுத்தி வருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |