Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம்… தமிழ் கட்டாயம் இல்லை… அதிர்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய மொழி பாடம் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதனையடுத்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப் படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 49 கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கபட்டுள்ளது. ஆனால் இந்தப் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் மொழி பாடம் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு வல்லுனர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

Categories

Tech |