தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எல்கேஜி – யுகேஜி, ஒன்றாம் வகுப்பு ரூ.12,459, இரண்டாம் வகுப்பு ரூ.12,449, மூன்றாம் வகுப்பு ரூ.12,579, நான்காம் வகுப்பு ரூ.12,832, ஐந்தாம் வகுப்பு ரூ.12,832, ஆறாம் வகுப்பு ரூ.17,077, ஏழாம் வகுப்பு ரூ.17,107, எட்டாம் வகுப்பு ரூ.17,027. மேலும் கடந்த வருடத்தை விட LKG முதல் ஏழாம் வகுப்பு வரை ரூ.18 வரையும், எட்டாம் வகுப்பில் ரூ.956 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.