அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை கட்டாயமாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசிடம் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்வழி கல்வி என்பதே இல்லை என்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கல்வி பயிற்றுவிக்கப்படுவதாக தமிழ்நாடு கல்வித்துறை வெளியிட்டிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தை மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட அரசு பள்ளிகள் உள்ளனவா? என்ற கேள்வியானது பள்ளிக்கல்வித் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்கப்பட்டது.
அதற்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூறியதாவது, சென்னை, செங்கல்பட்டு, சேலம் ,கிருஷ்ணகிரி ,திருப்பூர் மற்றும் கடலூர் ஆகிய 17 மாவட்டங்களில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழை இந்தியிடமிருந்து காப்பாற்றுவதற்காக அதிக போராட்டங்களை நடத்தி ஏராளமான உயிர்கள் தியாகம் செய்த நிலையில், தமிழக அரசு நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி இல்லை என்பதை நினைக்கும் போது பெரும் கவலையாக உள்ளது என்று கூறினார்.
மேலும் இந்த நிலைக்கு காரணம் அரசுதான் என்பது வேதனை அளிக்கிறது. இதையடுத்து இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது, 54 அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி இல்லை என்பது தவறு. தமிழ்வழிக் கல்வியை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை. மேலும் அனைத்து மாணவர்களும் ஆங்கில வழி வகுப்பில் சேர்ந்துள்ளனர் என்று கூறுவதுதான் சரி என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். இவரது கூற்றானது தமிழக அரசு தவறை முற்றிலுமாக மறைத்து விட்டு மாணவர்கள் மீது பழிபோடும் செயல் என்றும் தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளில் ஆங்கில கல்வி எதற்கு? என்று பல விவாதங்கள் 1937 ஆம் ஆண்டிலிருந்தே நடந்து வருகின்றன. 1959 ஆம் ஆண்டிலும் 1962 ஆம் ஆண்டிலும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டன.
இதனை அடுத்து 1970 ஆம் ஆண்டில் அப்போதைய கலைஞர் ஆட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அறிவியல் படைப்புகளை தமிழ் மொழியில் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால் சில அமைப்புகள் தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்று கூறி போராட்டம் நடத்தியதால், அந்த முடிவை கலைஞர் அரசாணையை திரும்பப் பெற்றது.
அதன்பின் 2006- 2011 ஆண்டில் திமுக ஆட்சியில் ஆங்கில கல்வி அறிவு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் திணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில் ஆங்கில வழிக்கல்வி முறை ஆனது தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் தாய் மொழிவழி கல்வி எதற்கும் குறைந்ததல்ல என்றும் வெளி நாடுகளான சீனா, ஜப்பான் ,கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும் மக்களுக்கு இந்த உண்மையை உணர்த்தி தமிழ் வழிக் கல்வியை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டாயமாக்க தமிழக அரசானது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.