தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆண்டு இறுதி தேர்வு நடக்கும் வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து விலகிய மாணவர்களை கருத்தில் கொண்டு எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கலாம் என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இடை நின்ற மாணவர்களை ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.