தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழகம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டில் மாநகராட்சி நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 8:30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளி நாட்களில் நடத்தப்பட வேண்டும்.
இதனையடுத்து எஸ்.எம்.சி. உறுப்பினர்கள் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், காய்கறிகள், உணவு பொருட்கள், குடிநீர் ஆகியவை சுத்தமானதாக பயன்படுத்தப்படுகின்றனவா என்று கண்காணிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் உணவு பொருட்களின் தரம், சுவை ஆகியவை பரிசோதிக்க வேண்டும் அதனை. தொடர்ந்து மாணவர்கள் தங்களின் தட்டு மற்றும் கைகளை சுத்தமாக கழுவுகிறார்கள் என்று கண்காணிக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் தூய்மையானதாக உள்ளதா என்று பரிசோதிக்கப்பட வேண்டும் என்று எஸ்.எம்.சி உறுப்பினர்கள் மாணவர்களுக்கு உணவு பரிமாறும் போது உதவி செய்யலாமா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணிகள் எஸ்.எம்.சி உறுப்பினர்கள் சுழற்றி முறையில் மேற்பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.