Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர் விவரம்… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழக பள்ளிகளில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஜெ ஜெயக்குமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 9.2 .2007 க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி நிர்வாகம் மூலம் நியமனம் பெற்ற பகுதி நேர தற்காலிக தொழில்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உரிய படிவங்களில் பூர்த்தி செய்து தனிநபர் மூலம் பள்ளி கல்வி ஆணையகரத்துக்கு செப்டம்பர் 23ஆம் தேதி அனுப்பி வைக்க வேண்டும். முன்னதாக பின்வரும் காரணிகள் பரிசீலிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

மேலும் பணி நியமன நாள் முதல் நிகழ் கல்வியாண்டு வரை எந்தவிதமான பணி முடிவும் இல்லாமல் தொடர்ச்சியாக பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பணியாற்றி வருவதை அவர்களின் வருகை பதிவேட்டை முழுமையாக பரிசோதித்து பரிந்துரை செய்யப்பட வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் வராமல் இருந்து தற்போது நிகழ் கல்வியாண்டில் பணியாற்றி வருபவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்க பரிசீலனை செய்யப்பட வேண்டும். மேலும் படிவம் 1 னில் தகுதியான நபர்களின் பெயர்கள் மட்டுமே பரிந்துரை செய்யப்பட வேண்டும் தகுதியற்ற நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்களை முழு பொறுப்பேற்று நேரிடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |