Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் தகுதி தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.ஒரு சில நேரங்களில் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் சமயத்தில் அரசு தற்காலிக ஆசிரியர்களை தேர்வு நடத்தாமல் நியமனம் செய்கிறது.ஆனால் இவர்களுக்கு நிரந்தர ஆசிரியர்களின் அளவிற்கு ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படாது.இருந்தாலும் நிரந்தர ஆசிரியர்கள் நியமனத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1990 – 2019 ஆம் கல்வியாண்டு முதல் பல பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட போது அதிக அளவிலான காலியிடங்கள் ஏற்பட்ட நிலையில் தேவையான ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர்களாக அரசு நியமித்தது. அவ்வாறு நியமிக்கப்பட்ட 2770 தற்காலிக ஆசிரியர்களுக்கு கடந்த ஆண்டு நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த பணி நீட்டிப்பு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |