Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு உள்ளது. இந்த அதிகாரிகள் சார்பாக முன்னரே மூன்று மண்டல ஆய்வு நடைபெற்ற நிலையில் தற்போது நான்காவது கட்டமாக மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ஆய்வு நடைபெறவுள்ளது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் தங்களது பள்ளிகளின் ஆய்வுக் கருத்துகளைக் கூற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |