Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள்…. அரசு அதிரடி முடிவு…!!

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் தொடர பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ் டூ மாணவர்களுக்கான இலவச நீர் பயிற்சி வகுப்புகளை மீண்டும் ஆன்லைனில் தொடர பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் டூ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |