தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்பிறகு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்வு என்பதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் தினமும் பள்ளிக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததும் பிற மாணவர்களுக்கும் சுழற்சிமுறை வகுப்புகள் கைவிடப்படும். மேலும் 1098, 14417 ஆகிய உதவி எண்கள் குறித்த அறிவிப்பு அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.