Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் 13,331 காலி பணியிடங்கள்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தற்போது டிடிஇ, b.ed ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மற்றும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் மாவட்டங்கள் வாரியம் காலிப்பணியிடங்களின் பட்டியலை பள்ளிகளின் பெயருடன் வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளின் பெயரை துறை வெளியிடாததால், இதுகுறித்த விவரங்களை சரிபார்க்க ஆசிரியர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால் பள்ளிகளின் பெயர்களுடன் காலி பணியிட விவரங்களை வெளியிட வேண்டும் என்று தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.எனவே விரைவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருப்போர் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |