Categories
தேசிய செய்திகள்

தமிழக பள்ளிகளில் 40 சதவிகித காலிப் பணியிடங்கள்….!! வெளியான சூப்பர் தகவல்…!!

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இ.எம்.ஐ.எஸ் பதிவு, பள்ளி வருகை பதிவேடு பராமரிப்பு, சம்பள விடுப்பு செயல்பாடுகள் நலத்திட்ட பொருட்கள் வழங்குதல் மற்றும் நலத்திட்ட பொருட்கள் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளுக்காக இளநிலை உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இதற்காகவே இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கோயம்புத்தூரில் மொத்தம் உள்ள 264 பள்ளிகளில் 40% இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

மேலும் 40% இளநிலை உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு காலியாக உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் 90 சதவிகித இரவு நேர காவலர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதாவது பள்ளிகளில் உள்ள கணினி மற்றும் பிராஜக்டர் போன்றவற்றை பாதுகாக்க இரவு நேரக் காவலர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்தப் பணியிடங்களை நிரப்ப உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |