தமிழகத்திலுள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் சார்பில் பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- போக்குவரத்து துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனத்தையே இயக்க வேண்டும். மேலும் அதற்கு உரிய காலத்தில் தரச்சான்று புதுப்பிக்க வேண்டும்.
- இதையடுத்து அந்த வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும்.
- மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக ஓட்டுநர் உரிமம் பெற்று ,10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
- இதன்பின் ஆசிரியர் நிலையில் இருக்கும் ஒருவர், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டாயம் வாகனத்தில் இருக்க வேண்டும்.
- மேலும் வாகனத்துக்கு அருகில் குழந்தைகள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே,வாகனத்தை இயக்க வேண்டும்.
- மேலும் பள்ளியில் குழந்தைகள் வகுப்பறைக்குள் சென்ற பின்னரே பள்ளி வாகனத்தை இயக்க வேண்டும்.
ஆகவே ஒவ்வொரு குழந்தையும் அவரவர் வீட்டுக்கு பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வது ,பள்ளி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். இந்நிலையில் ஏதேனும் ஒரு விபத்து ஏற்பட்டால், அதற்கு முழு பொறுப்பு அந்த பள்ளி நிர்வாகமே. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.