Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட திடீர் உத்தரவு…. கல்வித்துறை அதிகாரிகள் அதிரடி விசிட்…!!!

பள்ளிகளுக்கு திடீரென அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து,பல்வேறு உத்தரவுகளை  பிறப்பித்துள்ளனர். 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பானது குறைந்ததையடுத்து 2021- 22 ஆம் கல்வி ஆண்டினை முன்னிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்பின் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு,  நேரடி வகுப்புகள் நடைபெற்றது.  இந்நிலையில் உருமாறிய கொரோனா  நோய்த் தொற்றின் காரணமாக ஆன்லைன் மூலம் மீண்டும் பாடங்கள் நடத்தப்பட்டது.

இதையடுத்து இரவு நேர ஒழுங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது கொரோனா  நோய் பரவல் ஓரளவு குறைந்ததை தொடர்ந்து, இந்த கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கி, கடந்த மாதம் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி ஒன்றியத்தில் இருக்கும் சுமார் 20 பள்ளிகளுக்கு,கொள்ளிடம் வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஆசிரியர் பயிற்றுநர் ஐசக் ஞானராஜ் ஆகியோர் கடந்த 2 நாட்களாக பள்ளிகளின் தரநிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றார்கள். அந்த வகையில் கன்னியாக்குடி உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில்  செய்துள்ளனர்.

அப்போது ஆசிரியர்கள் வருகை, பள்ளியின் இருப்பு பதிவேடு, ஆய்வக பதிவேடு மற்றும் விலையில்லா பொருட்கள், மேலும் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்கள், மாணவர்களின் கற்றல்திறன், கட்டிடத்தின் உறுதித்தன்மை,கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |