Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளுக்கு வேலை நாட்கள் குறைக்க…. பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை…!!!!

தமிழக பள்ளிகளுக்கு வேலை நாட்களை குறைக்கும் படி, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே பள்ளி, கல்லூரிகள் எதுவும் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதை அடுத்து மாணவர்களுக்கான பொது தேர்வும் நடத்தப்படும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் மூலம் சரியாக மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியாத சூழலில், தற்போது விறுவிறுப்பாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தப்படுகின்றது. எனவே ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல், தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருப்பதால்,மாணவர்கள் பெரும் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.

அதேபோல ஆசிரியர்களும் அவர்களின் குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க முடிவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆகவே வாரத்தில் 6 நாட்களும் மாணவர்கள் பள்ளிக்கு ஓடிக்கொண்டிருப்பதும், பெற்றோர்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. எனவே கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்காததை காரணம் காட்டி, தமிழக அரசு 6 நாள் வேலைநாளாக அறிவித்ததை மாற்றி, திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் வேலைநாளாக அறிவிக்கும்படி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |