Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பாட குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தலைமை ஆசிரியர்கள் தினசரி பள்ளி வளாகங்களை சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி மற்றும் பாலியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |