Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு இனி பாதி சம்பளம்…. வெளியான ஷாக் நியூஸ்…. பரபரப்பு….!!!!!

கடலுார் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 19 மாதம் பாதியாக சம்பளம் வழங்கப்பட்டது. இதையடுத்து இடையில் பள்ளிகள் திறந்தபோது ஒரு சில மாதம் முழு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பினால் 10 தினங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்ததால், மறுபடியும் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளத்தை மட்டும் நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது. இது போன்று விடுமுறை அறிவிக்கப்பட்டால் பாதி சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது

ஆகவே இந்த அநியாயத்தை கண்டித்தும், முழு சம்பளம் வழங்க வேண்டியும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக குறிப்பிட்ட பள்ளி வளாகத்தில் திடீரென்று 40 ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவரான விமல் தலைமை தாங்கினார். மேலும் செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் பீட்டர் பெர்னாண்டஸ் உட்பட பெரும்பாலானோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர். அதாவது பள்ளி நிர்வாகம் முழு சம்பளத்தை கொடுக்க வேண்டும், அதுவரையிலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |