தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம், இடைநிலை சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் செல்வ சுந்தர்ராஜன், கணினி ஆசிரியர் சங்க பயிற்றுனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முருகையா இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட செயலாளர் சங்கர் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.