தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. அனைத்து வகுப்புகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தது. தற்போது எனினும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பிப்.1 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 23ஆம் தேதி (இன்று) வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆணைகளை பெற்ற ஆசிரியர்கள் வரும் 28ஆம் தேதி பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். மேலும் அனைவரும் புதிய இடங்களில் மார்ச் 1ஆம் தேதி பணியில் சேர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.