தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் மார்ச் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருதி நடப்பு நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 22 (நாளை) ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதனால் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் கால அவகாசம் நீட்டிப்புவழங்கப்பட்ட விவரத்தினை தெரிவித்தும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தினை கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் போது மாணவர்களின் வங்கிக்கணக்கு எண் மற்றும் ஐஎஃப்எஸ்சி கோடு ஆகியவற்றை கவனமாக பதிவு செய்ய வேண்டும். மார்ச் 22 (நாளை)ஆம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்காமல் உள்ள விண்ணப்பங்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும். அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களும் கல்வி நிலையங்கள் மூலம் தங்களுக்கு ஆன்லைனில் சமர்ப்பிக்கவும் விண்ணப்பங்களை காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஒப்பளிப்பு செய்யுமாறு அரசு தெரிவித்துள்ளது.