தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி முறையில் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. இதனால் தற்போது நடப்பு கல்வி ஆண்டுக்கான (2022-2023) மேல்நிலை 2ஆம் ஆண்டு மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக அரசு தேர்வு இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். இவற்றில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின் படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்குமாறு அரசு தேர்வுகள் இயக்ககம் கேட்டுகொண்டுள்ளது.
இதனிடையில் அறிக்கையில் இருப்பதாவது, தமிழகத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் 21ஆம் தேதி முதல் முதல் www.dge.tn.gov.in என்ற முகவரிக்கு சென்று, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனாளர் ஐடி மற்றும் கடவுச் சொல்லை உள்ளிடவும். இவற்றில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை கொண்ட பட்டியலை பதிவிறக்கம் செய்யவும். இப்பட்டியலில் மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, புகைப்படம் ஆகிய விபரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்கவேண்டும்.
ஏதேனும் தவறுகள் இருந்தால் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை அடிப்படையாக கொண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி திருத்தப்பட்ட மாணவர்களின் விபரங்களுடன் 10ஆம் வகுப்பு சான்றிதழ் நகலுடன் சேர்த்து இணைத்து வரும் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுகுறித்த கூடுதல் தகவல்களை பெறுவதற்கு 9498383081 / 9498383075 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.