Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் ஏற்பாடு…. பள்ளிக்கல்வித்துறை மெகா திட்டம்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பாக மாணவர்களின் வளர்ச்சிக்காக கற்றல், கற்பித்தல் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்து மாணவர்களுக்கும் முழுமையாக சென்றடைவதை உறுதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமை வகிக்கின்றனர்.

7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும் இந்த ஆய்வுக் கூட்டம் 2 நாட்கள் நடைபெறும். முதல் நாளில் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொள்கின்றனர். இரண்டாம் நாளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதன்படி வருகின்ற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். அடுத்து வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அதன்படி அடுத்தடுத்து வரும் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Categories

Tech |