Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து சுமார் 19 மாதங்களுக்கு பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் மாதம் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. இவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2 மாதங்களும், பிற வகுப்பு மாணவர்களுக்கு 1 மாதம் மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் மீண்டுமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் கடந்த சில நாட்களாக பரவி வரும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்கள் கற்றல் ரீதியாக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன்பின் மீண்டும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதால் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் பள்ளிகள் திறக்கும் வரையிலும் தொடரும் என்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியபோது, ஏற்கனவே திருப்பூர் மாவட்டத்தில் 1416 மையங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இல்லம் தேடி கல்வி திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

இத்திட்டத்தில் மாணவர்களின் ஈடுபாடு அதிகரித்தல் சுமார் 7 ஆயிரம் மையங்கள் வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களது கற்றலை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் வரை மட்டுமே இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் இதனை நடைமுறைப்படுத்தினால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உறுதுணையாக அமையும் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது

Categories

Tech |