Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு…. பிப்ரவரி 1ஆம் தேதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்த முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் வருகிற 1ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள், திட்டங்கள் போன்றவை குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக திமுக ஆட்சி வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

அதன்படி பள்ளிகள் திறப்பு, ஆன்லைன் வழி பாடங்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்க வரும் 1ஆம் தேதி சென்னையில் முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டம் நடக்க இருக்கிறது. இதற்குரிய சுற்றறிக்கையானது பள்ளி கல்வி கமிஷனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி போன்றோர் வழியே, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொது தேர்வுக்கான ஏற்பாடுகள, மாணவர் சேர்க்கை விபரம், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, அரசு பள்ளிகளின் ஆசிரியர் எண்ணிக்கை, பள்ளி கட்டட ஆய்வு விபரம், நர்சரி, பிரைமரி பள்ளிகளின் அங்கீகார நிலை தொடர்பான விபரங்களுடன் வருமாறு முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |