Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு?…. அரசின் முடிவு என்ன?…. வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக நாளை முதல் 1- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிக மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கிறது. இந்த கூட்டமைப்பின் தலைவர் அருணன் இது குறித்த கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்து அருணன் கூறியதாவது, தமிழகத்தில் பிப்ரவரி 1 நாளை முதல் பள்ளி திறப்பது வரவேற்கக்கூடியது.

இதனிடையில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் படிப்பதால் வகுப்பறை பற்றாக்குறை இருக்கிறது. இந்த வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றுவது சிரமமாக இருக்கும் காரணத்தினால் அதிகமான மாணவர்கள் படிக்கக் கூடிய அரசு பள்ளிகளில் மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறினார். முன்னதாக கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவு தொடர்பாக தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |