1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மே மாதம் 5-ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் தொடங்கி, மே மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, மே 13 ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை கோடைகால விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மே மாதம் 13ஆம் தேதி வரை 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 13 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.