Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வைத்த செக்….!!!!

18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், “சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு “குட் டச்” (Good touch), “பேட் டச்” (Bad Touch) குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறித்த நேரத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்தால் பயனடைவார்கள். ஆனால் ஸ்டைலாக வர வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்கள் பேருந்தில் படியில் நின்ற படி தொங்கி கொண்டு பயணிக்கின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |