Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாட்டில் அரசுபள்ளி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி கற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் பல உதவிகள், சிறப்பு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் அதிக ஊக்கத்துடன் பள்ளிக்கு வருகின்றனர். அந்த அடிப்படையில் சென்னை மாநகராட்சியின் 2022-2023ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றில் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. அதாவது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் சென்னைப் பள்ளிகளில் 1-8-ம் வகுப்பு வரை படிக்கும் 72,000 மாணவ, மாணவியருக்கு ரூபாய் 7.50 கோடியில் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும்.

2022-2023ம் கல்வி ஆண்டில்  சென்னையிலுள்ள உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 186 கோடியில் இணைய இணைப்பு வழங்கப்படும். 281 சென்னை தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் ரூபாய் 40 லட்சம் செலவில் கண்காட்சி நடத்தப்படும். 2022-2023ம் நிதியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை பள்ளிகளில் 31 பள்ளிகளுக்கு வழங்கிய மண்டிச்சேரி உபகரங்களை சிறந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நடைமுறைப் படுத்துவதுடன், இக்கல்வி முறை பிற மழலையர் வகுப்புகளில் படிப்படியாக செயல்படுத்தப்படஇருக்கிறது.

மேலும் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் பள்ளிநிர்வாகம் மற்றும் கல்வி வளர்ச்சி போன்றவற்றுக்கு ரூபாய் 59 லட்சம் மற்றும் ரூ.2.45 கோடியில் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் மட்டைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டுகளில் தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ரூபாய் 35 லட்சம் செலவிட இருக்கிறது. சென்னை பள்ளி மாணவர்களின் உடல் நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றை பேணிக்காத்து கல்வியை திறம்பட கற்றிட, திருவான்மியூர் சுற்றியுள்ள 23 சென்னைப் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரம் மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் தன்னார்வலர்கள் வாயிலாக காலைச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் காலைச் சிற்றுண்டி திட்டம் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருப்பதால், மேலும் பல பள்ளிகளில் தன்னார்வலர்களின் மூலமாக விரிவாக்கம் செயல்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |