தமிழகத்தில் பள்ளி மாணவர்களும் விவசாயத்தை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகளில் பசுமைப்படை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விளைநிலங்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆவணப்படுத்தப்பட்ட அதில் எது தேவையோ அதை அரசு செயல்படுத்தி வருகின்றது. மேலும் பள்ளி அளவில் விவசாயத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் பசுமை படை அமைக்கப்பட்டுள்ளது. பசுமை படையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு காய்கறிகள் விலை வைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.