தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், ஜூன் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மேலும், ஜூன் 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கு மற்றும் 27-ந் தேதி பிளஸ்-1 மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கமானது, நாட்டில் மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் அரசு, அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து தற்போது நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது. மேலும் இது குறித்து கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் புதிய மாணவர்களின் சேர்க்கைக்கு மாற்று சான்றிதழ் வேண்டுமென கட்டாயப்படுத்தவும் கூடாது என கூறியுள்ளார். மேலும் அந்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்குவதில் எவ்வித தாமதமும் ஏற்பட கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை முதல் 6 மாதங்களுக்கு மட்டும் செயல்படுத்துமாறு, பேச்சுவார்த்தையானது நடந்துள்ளது. அதாவது தன்னார்வலர்கள் மூலம் , தினந்தோறும் மாலை 5-மணி முதல் 7-மணி வரை பள்ளி நேரம் முடிந்த பின், மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் வகுப்புகள் எடுப்பதே இத்திட்டத்தின் குறுகிய விளக்கம் ஆகும்.
இந்நிலையில் ஒவ்வொரு குழு மாணவர்களுக்கும், வாரம் முழுவதும் சுமார் 6- மணிநேரம் இந்த வகுப்புகள் நடைபெறும். இதன் பின் மேற்குறிப்பிட்ட மாத இடைவேளை முடிந்த பின்,இந்த கல்வி திட்டம், படிப்படியாக நிறுத்தப்பட்டு அனைத்து மாணவர்களையும் நேரடி வகுப்புகளில் மட்டும், கலந்து கொள்ள வேண்டும் என்பது காட்டாயம் ஆகிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.