தமிழகத்தில் 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது அஇஅதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது.இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு லேப்டப் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று முதலில் அறிவித்திருந்தோம். ஆனால் அதற்கு பதில் தற்போது லேப்டாப் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.சிக்கல்களுக்கு தீர்வு கண்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.