Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மார்க் பதிவிட தேவையில்லை…. தேசிய தேர்வுகள் முகாமை….!!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஜேஇஇ தேர்வுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த தமிழக மாணவர்கள் மார்க் பதிவிட தேவை இல்லை என்று தேசிய தேர்வுகள் முகாமை அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில் பாஸ் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்ததால் அவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர். இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை தேசிய தேர்வுகள் முகாமைக்கு கோரிக்கை வைத்த நிலையில் தற்போது இந்த விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |