Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களே!… இதை மீறினால் நடவடிக்கை…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள பள்ளி மாணவர்கள் பலர் ஆசிரியர்கள் திட்டியதும் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதை பார்க்கிறோம். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தவறுசெய்யும் பட்சத்தில் 5 முறை தவறை உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சில தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. அந்த வகையில் ஒரு குழந்தை படிக்கவில்லை என்றல் முதலில் அந்த குழந்தை எதற்காக படிக்கவில்லை என்பதை மதிப்பீடு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் படிப்பில் குறைபாடுடைய குழந்தை எனில் தலைமையாசிரியரிடம் அழைத்து சென்று தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் கற்றலில் குறையாடில்லாத குழந்தை என்றால் என்ன பிரச்சனை என்பதை கேட்டறிந்து அதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் பள்ளி மாணவர் பள்ளியின் உடைமை பொருட்களை சேதப்படுத்தினால் குழந்தையின் பெற்றோர் (அல்லது) பாதுகாவலர் அந்த பொருளை மாற்றிதர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது படியில் தொங்கிக்கொண்டே செல்வது, புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாகுதல், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வருவது, பள்ளியில் ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பது, ஆசிரியர்களை உருவ கேலி செய்வது, பள்ளி சுவர்களில் தகாத வார்த்தைகளில் எழுதுவது போன்ற தவறினை செய்கின்றனர். இதன் காரணமாக முதலாவதாக மாணவர்கள் தவறு செய்யும் சமயத்தில் பள்ளி ஆலோசகர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவேண்டும். அத்துடன் அதே மாணவர் திரும்ப திரும்ப தவறு செய்தால் ஆசிரியர்கள் ஒழுங்கு முறை நுட்பங்களை கையாளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் தவறு செய்யும்போது எந்த விதத்தில் தண்டனை கொடுக்க வேண்டும் என்பதனை பார்க்கலாம்.

# 5 திருக்குறளை அதன்பொருளோடு ஆசிரியரிடம் எழுதிக்காட்ட சொல்லலாம்.

# பெற்றோரிடமிருந்து 2 கதைகளை கேட்டு வந்து வகுப்பறையில் கூற வேண்டும்.

# ஒருவாரம் முழுவதும் தினசரி 5 செய்திகளை சேகரித்து வகுப்பறையில் படித்துகாட்ட வேண்டும்.

# ஒருவாரத்துக்கு வகுப்பு தலைவராக இருக்க வேண்டும்.

# 5 முக்கிய வரலாற்று தலைவர்களை பற்றி அறிந்து வகுப்பறையில் அது தொடர்பாக பேச வேண்டும்.

# தினசரி என்னென்ன பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும், பாதுகாப்பு மற்றும் முதலுதவி, சிறிய அளவிலான காய்கறி தோட்டம் போன்றவை குறித்தான கற்பனையை வரைபடமாக வரைய வேண்டும்.

# கைவினைபொருட்களை செய்வதில் ஆர்வம் காட்டவேண்டும். இவ்வாறு எளிமையான முறையில் மாணவர்களை கையாள வேண்டும்.

# அதுமட்டுமின்றி குழந்தைகள் தவறுசெய்யும் பட்சத்தில் எதற்காக அந்த குழந்தை அந்த தவறை செய்தது, அந்த தவறு நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை சிந்திக்க 1 மணி நேரமாவது அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரே மாணவர் 4 முறை தவறுசெய்யும்போது அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து குழந்தை நேய காவல் அதிகாரி (CWPO) வாயிலாக குழந்தைக்கு அறிவுரை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |