Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களே…. இன்று மாலை ரெடியா இருங்க…. வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு வந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் நடப்பு ஆண்டில் கட்டாய மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தேர்வு ரத்து என நேற்று இரவு செய்தி வெளியானது. இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் தேர்வு நடக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். தேர்வு அறிவிப்புகள் குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு குறைந்த கால கட்டமே மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். பாடத்திட்டத்தை ஏற்கனவே குறைத்துள்ளோம். அதன் அடிப்படையில்தான் தேர்வுகளை நடத்த உள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |