தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக கே. அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைவராக முறைப்படி கமலாலயத்தில் ஜூலை 16-ஆம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். அன்று கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக அவர் வர உள்ளார். வழியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.
அதன்பிறகு பகல் 2 மணி அளவில் கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி, தேசிய இன பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.