Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த திரைப்படம்…. “படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைப்பு”…. வெளியான காரணம்…!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த திரைப்படத்தின் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாஜக கட்சியில் இணைந்தார். தற்பொழுது தமிழக பாஜக கட்சியின் தலைவராக இருக்கும் இவர் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். கன்னட மொழியில் உருவாகியிருக்கும் அரபி என்ற திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தனது விடா முயற்சியால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த நீச்சல் வீரன் விஸ்வாஷின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் இயக்க ஸ்ரீ விஜய ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில் படத்தின் டீஸர் நேற்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. மேலும் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்ததற்கு அண்ணாமலை ஒரு ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |