நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அதற்கான முன் தயாரிப்பு பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி இருக்கிறது. குறுகிய கால இடைவேளையில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை தமிழ்நாட்டுக்கு வந்து சென்று இருக்கிறார். அதனைப் போல தெலுங்கானா, கேரளாவுக்கு அமித்ஷா சமீபத்தில் சென்றார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா நேற்று தமிழகம் வந்தார். மதுரை விமான நிலையத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதன் பிறகு மாலை காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாரம்பரியம்படி வேட்டி, சட்டை, துண்டு போட்டு அவர் இதில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்த கூட்டத்தை பார்க்கும் போது இங்கு எழுப்பப்படும் கரகோஷத்தை காணும் போது ஒரு தெளிவான உண்மை எனக்கு தெரிகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இருக்கிறது.
தமிழகத்தில் தாமரை மலர போகிறது. தேசிய அரசியலில் தமிழ்நாட்டின் பங்களிப்பை மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் சாதனையை பட்டியலிட்ட ஜே.பி. நாட்டா திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். ஜி.பி.நாட்டாவின் இந்த பேச்சை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மொழிபெயர்த்தார். இருவரும் மேடையில் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்க பார்வையாளர்கள் அரங்கில் காலி சேர்கள் காத்து வாங்கிக் கொண்டிருந்தது. அப்போது முகத்தில் கோபத்தை காட்டாத ஜே.பி.நாட்டா பொதுகூட்டம் முடிந்த பிறகு கட்சி வலுப்படுத்துவது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை என ஆவேசமாக பேசியதாகவும், அதிருப்தியுடன் டெல்லிக்கு செல்லும் அவர் தமிழக தலைமையை (அண்ணாமலை) மாற்றுவது குறித்து அமித்ஷாவிடம் பேச உள்ளதாக பரப்பரப்பு தகவல் வெளியாகி உள்ளது.