இந்தியாவில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட கொடுமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யூபிஎஸ்சி தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. தமிழகத்தில் இந்த தேர்வு எழுதும் பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு வயது 21 முதல் 32 குள் இருக்க வேண்டும். இதில் பட்டியல் இனத்தவர்கள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சலுகை பெறுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 20ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நவம்பர் 24 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதில் விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும்.