தமிழகத்தில் தீயணைப்பு வீராங்கனைகளாக பெண்களை சேர்ப்பது குறித்து தமிழக அரசு பரிந்துரைக்க பட்டுள்ளதாக தமிழக தீயணைப்புத் துறை இயக்குனர் கிஷோர் ரவி தெரிவித்துள்ளார். தீயணைப்புத்துறை அதிகாரிகள் பதவியில் தற்போது 22 பெண்கள் இருப்பதாக கூறிய அவர், வீராங்கனைகள் ஆக பெண்களை சேர்ப்பது குறித்த பரிந்துரையை தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தாம்பரம் அருகே புதிய அகாடமி அமைக்கப்பட உள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும். மாநில பேரிடர் மீட்பு பணியில் நிரந்தர பணியாளர்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Categories