Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக பெண்களே!…. ஓசிலாம் இனி நமக்கு வேண்டாம்…. இனிமேல் இப்படி பண்ணுங்க…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி….!!!!

அமைச்சர் ஓசி பஸ் என்கிறார், இதனால் இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியளர்களை சந்தித்தபோது “ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பில்லை. வசதியானவர்கள் தான் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க போகின்றனர் என்று அமைச்சர் கூறுகிறார். இவ்வாறு கூறுவதற்கு எதற்காக ஒரு அமைச்சர்.? பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களது  சொந்த ஊருக்கு எளிதில் போகமுடியாத அளவுக்கு அரசுப் பேருந்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகிறது.

அரசுப்பேருந்துகள் கிடைக்காததால் மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். அவ்வாறு பயணிக்கும்போது அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையில் பேருந்துக்கே அதிகம் செலவழித்தால் ஊருக்கு சென்று எவ்வாறு பண்டிகை கொண்டாட முடியும்? அனைத்துமே இங்கு வியாபாரம் தான் எனில், அரசாங்கமும் வியாபார ரீதியாக நடக்கிறதா..? ஆகவே மக்களுக்கான அரசு இது இல்லையா என்ற கேள்வி எழுகிறது. மகளிருக்கான இலவசப் பயணம் பற்றிய அமைச்சர் பொன்முடியின் கருத்தை கண்டிக்கிறேன். அ.தி.மு.க சார்பாக முதிய பெண்மணியை தூண்டி இலவச பயணத்துக்கு எதிராக பேசி வீடியோ பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அது உண்மையாகவே இருப்பின் நன்றாக இருக்கும்” என்றார்.

Categories

Tech |