Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் அதிக கட்டணம்….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் பொதுவாகவே தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வெளியூரில் இருக்கும் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.அதனால் அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும்.இதனால் மக்களின் வசதிக்காக தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக அக்டோபர் 21 முதல் 23ஆம் தேதி வரை சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்.ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொலைபேசி எண் மூலம் மக்கள் புகார் அளிக்கலாம். அதன்படி அதிக கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு 18004256151, 044-24749022, 044-26280445, 044-26281611 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |