Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் இனி இது கட்டாயம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது .அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அவ்வாறு பொதுமக்கள் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

கோவில்கள், அரசு விழாக்கள், திருவிழாக்கள்,திருமண மண்டபங்கள் மற்றும் திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது. அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்தாலே ஓரளவுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக் கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை பேருந்து நடத்தினர் கவனிக்க வேண்டும். பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் பேருந்துகளில் இந்த கட்டுப்பாடு அமலாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |