Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் இனி…. பெண்களை ஆண்கள் முறைத்து பார்க்க கூடாது…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தினந்தோறும் பேருந்துகளில் கோடிக்கணக்கான பெண்கள் பயணம் செய்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் இலவச பேருந்து திட்டம் கொண்டு வந்த பிறகு தினந்தோறும் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் மூலமாக பெண்கள் யாரையும் நம்பி இருக்காமல் பணிக்காக மற்றும் கல்விக்காக வெளியில் வருவது அதிகரிக்கும்.பொருளாதாரத்தில் மட்டும் அல்லாமல் சமூகத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு ஆண்களால் ஒரு சில இடங்களில் பிரச்சனை ஏற்படுகின்றது.

இதனை தடுக்கும் நோக்கத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்து பார்க்க கூடாது. ஒருவேளை ஆண் பயணிகள் பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் வாகனத்தில் இருந்து இறக்கி விடலாம்.

எச்சரிக்கையை மீறும் ஆண் பயனியை வழியில் உள்ள காவல் நிலையத்தில் நடத்துனர் ஒப்படைக்கலாம். ஆண் பயணிகள் கூச்சலிடுவது, கண் அடித்தல்,விசில் அடித்தல் மற்றும் செய்கை உள்ளிட்டவற்றை செய்யக்கூடாது என்று பல்வேறு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் பேருந்துகளில் இந்த கட்டுப்பாடுகள் இனி கடைப்பிடிக்கப்படும்.

Categories

Tech |