தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் மீண்டும் இருக்கைகளில் குறியீடு வரையப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுவும் குறிப்பாக பேருந்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதன்படி தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனால் தேர்தலுக்கு பிறகு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு பேருந்துகளில் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக பேருந்து இருக்கையில் மீண்டும் குறியீடு வரையப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படும். குறிப்பிட்ட பயணிகளுக்கு மேல் இருந்தால் அடுத்துவரும் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.