தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுபற்றி நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில், பழங்குடியின பெண்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோளூர் தேவர்சாலா ஆகிய பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் பெண்களுக்கு தேசூர், மருதூர், வாலாஜாபாத் தலைஞாயிறு, கீளாம்பாடி, கோத்தகிரி, மூலைக்கரைப்பட்டி, திருப்பணந்தாள், புதுப்பாளையம், கீழ்வேளூர், இடைக்கழிநாடு, கணியூர், ஓவேலி, சின்னக்கம்பாளையம், கீழ்குந்தா, புதுப்பட்டி, பூலாம்பாடி, ஆயக்குடி, பள்ளிப்பட்டு, புலியூர், பள்ளிகொண்டா, முதூர், இலஞ்சி, மீஞ்சூர், அச்சிறுப்பாக்கம், சுந்தரபாண்டியபுரம், உதயேந்திரம், குளத்துப்பாளையம், வேடப்பட்டி, மெலட்டூர், நெய்க்காரப்பட்டி, வேலூர், காட்டுப்புதூர், கொரடாச்சேரி, தொட்டியம், விரகனூர், பெத்தநாயக்கன்பாளையம், அடிக்கரட்டி, மரக்காணம், ஹீலிகள், பாலசமுத்திரம், வீரபாண்டி ஆகிய 43 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆதிதிராவிடர் பொதுப் பிரிவுக்கு செந்தாரப்பட்டி, நடுவட்டம், கோம்பை, அரும்பாவூர், மல்லாபுரம், ருத்திராவதி, அனந்தபுரம், திருப்போரூர், எஸ்.கொடிக்குளம், பேரளம், பாப்பிரெட்டிப்பட்டி, கங்குவார்பட்டி, ஆர்.புதுப்பட்டி, மணிமுத்தாறு, ஆலங்காயம், தென்கரை, கீரனூர், தியாகதுருவம், திருவேங்கடம், தேரூர், வேப்பத்தூர், மணல்மேடு, எஸ்.புதூர், கருங்குழி, சீராப்பள்ளி, தாமரைக்குளம், ஆய்குடி, கொங்கலாபுரம், காளப்பநாயக்கன்பட்டி, அகரம், கீழ்பெண்ணாத்தூர், பி.மீனாட்சிபுரம், சித்தையன்கோட்டை, படைவீடு, பட்டினம், கடத்தூர், ஹைவேவிஸ், ஆதனூர், கருப்பூர், நாமகிரிப்பேட்டை, கடையம்பட்டி, மாமல்லபுரம் ஆகிய 42 பேரூராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவு பெண்களுக்கு ஆரணி, நாரவாரிகுப்பம், உள்பட 200 பேர் ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன மற்ற பேரூராட்சிகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.