தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வானது கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அந்த அடிப்படையில் 10, 11, 12 ஆம்வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று (மார்ச்.2) காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டு உள்ளார். அதாவது,
10ஆம் வகுப்புக்கான தேர்வுகள்
# மே.6-ஆம் தேதி தொடங்கி மே.30ஆம் தேதி வரை நடைபெறும்.
10ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்
# ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும்.
11ஆம் வகுப்புக்கான தேர்வுகள்
# மே.9-ஆம் தேதி தொடங்கி மே.31ஆம் தேதி வரை நடைபெறும்.
11ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்
# ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்படும்.
12ஆம் வகுப்புக்கான தேர்வுகள்
# மே.5ஆம் தேதி தொடங்கி மே.28ஆம் தேதி வரை நடைபெறும்.
12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்
# ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும்
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள்
#ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை நடைபெறும்.
# மேலும் பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணையை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் சென்று பார்க்கலாம் .
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இதில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பில் 8.49 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு தேர்வை 8.36 லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன ‘டிப்ஸ்’ தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியபோது, “பொதுத்தேர்வுக்கு தயாராகி உள்ள மாணவர்களை மகிழ்ச்சியாக படிக்க சொல்லுங்கள். மேலும் மன நிறைவோடு தேர்வுகளை எழுதச் சொல்லுங்கள். அடுத்தவர்களின் திருப்திக்காக தேர்வு எழுதாமல் நான் படித்து நான் திருப்தி அடைந்திருக்கிறேன் என்ற அளவிற்கு தேர்வை எழுத வேண்டும்” என்று முதலவர் கூறியதாக அமைச்சர் கூறினார்.