Categories
மாநில செய்திகள்

தமிழக பொதுப்பணித் துறையில் 500 காலிப்பணியிடங்கள்….வெளியான சூப்பர் தகவல்….!!!

தமிழக பொதுப்பணித் துறையில் உதவி செயற்பொறியாளர் பதவியில் 500 காலிப் பணியிடங்கள் இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம், அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால், போட்டித்தேர்வுகள் நடைபெறாத சூழலில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. ஆகவே இந்த 2022-ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 32 வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன்படி குரூப்-2, 2A  மற்றும் 4 போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது பொதுப்பணி துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த துறையில் காலியாக உள்ள உதவி செயற்பொறியாளர் பதவியில் 500 காலிப்  பணியிடங்கள் இருப்பதாக, தமிழ்நாடு பொறியியல் சங்க பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 2015 ம் ஆண்டுக்கு பிறகு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

மேலும் நேரடியாக பொறியியல் கல்லூரி முடித்தவர்கள் மற்றும் டிப்ளமோ படித்து அரசு வேலையில் சேர்ந்து, பின் 5 ஆண்டு பணி அனுபவத்துடன் மாலை நேர கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தவர்களும் உதவி பொறியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களும் இளநிலை பொறியாளர்களும் 3:1 விகிதத்தில் உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான  அரசாணை வெளியிடப்பட்டது. இளநிலை அல்லது பணி மாற்றல் பொறியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதில் அரசு தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |