Categories
மாநில செய்திகள்

தமிழக போலீசாருக்கு செம ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் சட்டசபையில் கடந்த மே பத்தாம் தேதி காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில்,போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதன் மூலமாக 10,508 பேர் பயனடைவார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, போலீசாரக்கு வாட விடுமுறை வழங்கப்பட்டு வருவதைப் போல சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு பரிந்துரைத்தார்.

இதனை ஆராய்ந்து பரிசீலனை செய்து போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு கொடுத்த முன்மொழிவினை ஏற்றுக்கொண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு தேவையான திருத்தங்கள் வழங்குவதற்கு போலீஸ் நிலை ஆணை தனியாக வெளியிடப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காவலர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |