Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களின் முழு ஆதரவும் எங்களுக்கு இருக்கு…. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி….!!!!

பேரவை அலுவல்களில் கலந்துகொண்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது, “ஜனநாயக கடமையை நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றோம். அ.தி.மு.க-வில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமானது ஆகும். பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட நிபந்தனைகள் விதித்திருப்பது எம்.ஜி.ஆர் மனதில் வலி ஏற்படுத்தும். அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை முழு மனதோடு ஏற்று கொள்கிறோம்.

மக்களின் முழுஆதரவும் எங்களுக்கு உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவையானது கூடியது. கூட்டம் துவங்கியதும் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, முலாயம்சிங் யாதவ் உள்பட 7 பேர் மறைவுக்கு பேரவைத் தலைவா் அப்பாவு தலைமையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் கோவை தங்கம் உள்ளிட்ட 10 முன்னாள் எம்எல்ஏ-க்களின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

அதன்பின் பேரவைக்கூட்டத்தை நாளைக்கு ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். இபிஎஸ் அணி புறக்கணித்த சூழ்நிலையில் இன்று பேரவைக்கு ஓபிஎஸ் அணியினர் வந்தனர். தமிழக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து நீடிக்கிறார். எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதய குமாரை அறிவிக்க வேண்டும் என்ற எடப்பாடியின் கோரிக்கையானது ஏற்கப்படவில்லை.

Categories

Tech |